Wednesday, November 2, 2011

ரொமான்டிக் மூடு வர அனுஷ்காவின் அசத்தல் ஐடியா!


சினிமா சூட்டிங்கின்போது ரொமான்டிக் மூடு வர அனுஷ்கா ஒரு அசத்தலான ஐடியாவை கடைபிடிக்கிறாராம். அதேபோல சோக காட்சிகளுக்கும் ஒரு ஐடியாவை வைத்திருக்கிறாராம். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்காவுடன் நடிக்க பல முன்னணி ஹீரோக்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கிறார். அனுஷ்காவின் தேவை அதிகமாக இருப்பதால் அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறாராம். ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும்போது, ஆளைத் தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வாராம். அந்த வாசனையில் ஹீரோவுக்கும், தனக்கும் நல்ல ரொமான்டிக் மூடு வந்து காட்சி சூப்பராக வரும் என்பது அவரது ஐடியா. அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருப்பாராம். அவ்வாறு செய்வதால் சோகமான மூடு பார்ம் ஆகி காட்சி கலக்கலாக வந்து விடுமாம். அது மட்டுமல்ல தனக்கு யோகா தெரியும் என்பதால் பிறரையும் யோகா செய்யுமாறு கூறி சில ஆசனங்களையும் கற்றுத் தருகிறாராம்
Share