Friday, March 18, 2011

முரளியின் சுழலில் வீழ்ந்தது நியூசிலாந்து அணி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. 


அதிகபட்சமாக கேப்டன் சங்கக்கரா 128 பந்தில் 12 பவுண்டரி 2 சிக்சருடன் 111 ஒட்டங்களையும் எடுத்தார். ஜெயவர்த்தனே 66 ஒட்டங்களையும், மேத்யூஸ் 41 ஒட்டங்களையும் எடுத்தனர். பந்து வீச்சில் டிம் சவுதி 3 விக்கெட்களையும், நாதன் மெக்குலம் 2 விக்கெட்களையும் இழந்தனர்.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 35 ஓவர்களில் 153 ஒட்டங்களுக்குள் சுருண்டது. இதையடுத்து 112 ஒட்ட வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டெய்லர் 33 ஒட்டங்களையும் எடுத்தார், ஓரம் 20 ஒட்டங்களையும் எடுத்து அவுட்டாக வில்லை. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் முரளிதரன் 4 விக்கெட்களும், மென்டிஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.  ஆட்டநாயகனாக 
சங்கக்கரா தெரிவுசெய்யப்பட்டார். Share