Saturday, March 19, 2011

அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி 1999 ஆம் ஆண்டின் பின்னர் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் பெற்ற முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியஅணி 46.4 ஓவர்களில் 176 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 1992 ஆம் ஆண்டின் பின்னர் உலகக் கிண்ணப் போட்டியொன்றில் அவுஸ்திரேலியா பெற்ற மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
பிரட் ஹடின் 42 ஓட்டங்களைப்பெற்றார்.பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் உமர் குல் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அப்துல் ரஸாக் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.ஆஷாத் ஷபிக் 49 ஓட்டங்களையும் பெற்றனர். உமர் அக்மல் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றார்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் பிரெட் லீ 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.உமர் அக்மல் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
இவ்வெற்றியின் மூலம் குழு 'ஏ' இல் பாகிஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவில் இலங்கை அணி 9 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் அவுஸ்திரேலியா 9 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையும்பெற்றுள்ளன.நியூஸிலாந்து 8 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் உள்ளது.
Share