Monday, March 14, 2011

4 வது இடத்துக்கு முன்னேறியது வங்களாதேஷ்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நெதர்லந்தை தோற்கடித்து பிரிவு B ல்  6  புள்ளிகளுடன் 4 வது இடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்து. எஞ்சியுள்ள போட்டியில் தோல்வியுறும் பச்சத்தில் கால்லிறுதிக்கு செல்வது உறுதியாகும்.


சிட்டகொங்கில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 46.2 ஓவர்களில் 160 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நெதர்லாந்து அணியின் நான்கு வீரர்கள் ரன் அவுட்முறையில் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களில் அப்துல் ரஸாக் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 
இம்ருல் காயிஸ் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களைப் பெற்றார்.
Share