Monday, March 14, 2011

பாகிஸ்தானை சமாளிக்குமா சிம்பாவே


உலக கிண்ண கிரிக்கெட்டில் இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் வலிமையான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை சந்திக்கிறது.
பாகிஸ்தான் அணி பங்கேற்ற 4 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் தோல்வியடைந்து இதுவரை 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்று ஜிம்பாப்வேயை வீழ்த்தும் பட்சத்தில் 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறலாம். இதற்கு மிஸ்பா, யூனிஸ் கான், உமர் அக்மல் உதவுவது உறுதி.
கடந்த போட்டியில் களத்தடுப்பில் தவறு செய்த கம்ரான் அக்மல் இன்று விழித்துக்கொள்வார் என நம்பலாம். 4 போட்டிகளில் 60 ரன்கள் மட்டும் எடுத்துள்ள கேப்டன் அப்ரிதி தனது பேட்டிங்கில் எழுச்சி காண முயற்சிக்க வேண்டும்.
பந்துவீச்சில் வழக்கம் போல அப்ரிதி அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது உறுதி. தவிர உமர் குல், முகமது ஹபீஸ், அக்தர் வேகத்தில் ஜிம்பாப்வேக்கு மிரட்டல் தர காத்திருக்கின்றனர். ஜிம்பாப்வே அணியை பொறுத்த வரை பங்கேற்ற 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.
இருப்பினும் அணியின் காலிறுதி வாய்ப்பு இன்னும் மங்கிவிடவில்லை. இன்று பாகிஸ்தானை வீழ்த்தி, அடுத்து கடைசி போட்டியில் கென்யாவை சாய்க்கும் பட்சத்தில் ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம்.
இன்று அந்த தவறுகளை சரி செய்து வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும். பிரண்டன் டெய்லர், தைபு, எர்வின் ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. பவுலிங்கில் மபோபு, பிரைஸ் மட்டும் ஆறுதல் தருகின்றனர். மற்ற வீரர்கள் ஏமாற்றுகிறார்கள்.
Share