Wednesday, December 21, 2011

கோவையில் நண்பன் பாடல் வெளியீட்டு விழா!

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் என்று எங்கெங்கோ போய் படத்தின் ஆடியோ விழாக்களை நடத்தும் சினிமாக்காரர்கள் மத்தியில், தனது நண்பன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கோவையில் பிரம்மாண்டமாக நடத்த போகிறார் டைரக்டர் ஷங்கர்.  வருகிற 23ம்தேதி கோவை ஹிந்துஸ்தான் காலேஜ் வளாகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் படத்தின் ஹீரோயினான இலியானாவும் கலந்து கொள்ளப் போகிறாராம். இப்பவே அரங்கத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று விற்க ஆரம்பித்து விட்டார்களாம் சிலர்.
Share