Friday, December 9, 2011

மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா!

அடங்காத இளமை, அசராத திறமை என்று முதல் படத்திலேயே கோடம்பாக்கத்தை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்யா. இவர் நடித்த மயக்கம் என்ன அவ்வளவு பெரிய ஹிட்டா என்றால், அட போங்கப்பா என்று அலுத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால், அப்படத்தில் நடித்த ரிச்சாவுக்கு மட்டும் மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது தினந்தோறும். தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் கைகாட்டும் இடத்திற்கு தன்னையறியாமல் தள்ளப்பட்டிருக்கிறார் ரிச்சா. அதை தக்க வைத்துக் கொள்வதை போல அவர் நடந்து கொள்வதும் இன்னொரு சிறப்பாக கருதப்படுகிறது கோடம்பாக்கத்தில். அது என்னவாம்? வேறொன்றுமில்லை, அவ்வப்போது நடைபெறும் மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா. பலரையும் சந்திப்பது, பளபளவென பழகுவது என இவரது அப்ரோச், அத்தனை ஹீரோக்களையும் கவர்ந்திருக்கிறதாம். ஏற்கனவே தமன்னா, அமலா என்று புழங்கிய பார்ட்டிகள்தான். இந்த இடத்தில் ரிச்சாவின் வரவு மேலும் ஒரு சிட்டிகை சர்க்கரைதானே?  
Share