Saturday, November 12, 2011

விஜய்யுடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

இரண்டு வெற்றிப்படங்கள் - 'வேலாயுதம்', '7ஆம் அறிவு'. நடிகர் விஜய்க்கு மிக பெரிய மாற்றத்தை கொடுத்த 'வேலாயுதம்' படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில். '7ஆம் அறிவு' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைகிறார் இவர், இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை படமாக்க முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை தேர்வு செய்துள்ளனர். காரணம் கதைப்படி கடலோர ஊரான திருசெந்தூரில் தொடங்கி மும்பை சென்றடைகிறது. ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல ஆக்ஷன் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். இந்த படத்திற்கு இரண்டு ஹீரோயின்கள் என்கிறது இயக்குநர் வட்டாரம், மேலும் இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை; ஆனால் ஹீரோயின்கள் லிஸ்டில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும், 'வாமனன்' பட நாயகி பிரியா ஆனந்தும் உள்ளனர். படபிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என்கிறது படக்குழு.
Share