Sunday, November 6, 2011

நியாயத்துக்கு போராடுகிற மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது எனது கடமை: வைகோ

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (05.11.2011) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இடிந்தகரையில் 19வது நாளாக நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நெல்லை மாவட்ட கடற்கரை மக்களும் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் உள்ளிட்டோரை கொச்சைப்படுத்தும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மீனவ மக்கள் தங்களுக்காக போராடவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடுகிறார்கள்.
நான் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்க வந்ததற்கு அடிப்படை காரணம், இப்படி தங்களை வருத்திக்கொண்டு தென் தமிழ்நாட்டை காப்பாற்றுகிற துடிக்கிற மக்களை களங்கப்படுத்த சில வஞ்சக சக்திகள் மத்திய அரசு தூண்டுதலால், அவர்கள் மீது அபாண்டமான பழியை சுமத்தி, விஷத்தை கக்குகிறார்களே என்பதால் தான், நியாயத்துக்கு போராடுகிற மக்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது எனது கடமை என்ற உணர்வோடுதான் இந்த உண்ணாவிரத்தில் நான் பங்கேற்றேன் என்றார்.
Share