Wednesday, March 16, 2011

பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் : ரம்யா நம்பீசன்

ராமன் தேடிய சீதை மூலம் அறிமுகமான ரம்யா நம்பீசன் பெரிய நடிகர்களுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக  தெரிவித்தார். இளைஞன் படத்தை தொடர்ந்து ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் படம் குள்ளநரி கூட்டம். வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு  நாயகனாக நடித்துள்ள இப்படத்தை டைரக்டர் ஸ்ரீபாலாஜி இயக்கியுள்ளார். குள்ளநரி கூட்டம் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆசிஷ் ஜெயின், நாயகன் விஷ்ணு, நாயகி ரம்யா நம்பீசன், இசையமைப்பாளர் செல்வகணேஷ், பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரம்யா நம்பீசன், `தமிழில் நான் நடித்து வெளிவந்த முதல் படம், ராமன் தேடிய சீதை. அதையடுத்து, ஆட்ட நாயகன், இளைஞன் ஆகிய படங்கள் வந்தன. இதுவரை நான் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்களும் அல்ல. பெரிய கதாநாயகர்களும் அல்ல. பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. எல்லா கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன். மலையாள படங்களில், நான் சொந்த குரலில் பாடிவிட்டேன். அதேபோல் தமிழ் படங்களிலும் சொந்த குரலில் பாட ஆசைப்படுகிறேன். நல்ல வாய்ப்பு வந்தால், சொந்த குரலில் பாடுவேன், என்றார். 
Share