Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Saturday, March 19, 2011

விஜய்க்கு குஷ்பு எச்சரிக்கை !

அரசியலுக்கு வந்தால் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் ஆசையில் இருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகை குஷ்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்றும், அதிமுகவுக்கு ஆதரவாக அறிக்கை மட்டுமே விடுப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ... இந்த தேர்தலுக்கு பிறகு விஜய் தனிக்கட்சி தொடங்கி, முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், மக்கள் பணிகளில் ஈடுபட விரும்பும் யாரும் அரசியலில் ஈடுபடலாம். விஜய்யும் தாராளமாக வரலாம். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர வேண்டும். சினிமாவில் நடிக்கும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். விசில் அடித்தும் ரசிப்பார்கள். அவர்கள் எல்லோருடைய ஓட்டும் நமக்குத்தான் விழும் என்று எதிர்பார்த்து அரசியலுக்கு வரக்கூடாது. சினிமாவை விட அரசியல் உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான், என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு திமுகவில் இணைந்த நாள் முதலே கட்சிப்பணிகளை ஆற்றத் தொடங்கி விட்டார். அவருக்கு இந்த தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Share

Wednesday, March 16, 2011

விஜய் அதிரடி திருப்பம் அறிக்கை மட்டும்தான் !


அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் வரும் தேர்தலில் பிரசாரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய்வது தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடினார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும்கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர்களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் ஆளும்கட்சி மீது குற்றம்சாட்டினார்.

இதனால் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் இதுபற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சி.யோ எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில், அதிமுகவில் விஜய்க்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்படவிருப்பதாகவும், எஸ்.ஏ.சி., புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி எஸ்.ஏ.சி.,யிடம் கேட்டால், மழுப்பலான பதிலையே தெரிவித்தார். 

தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் நடைபெறும் சூட்டிங்கிற்கு கிளம்பும் திட்டத்தில் இருக்கும் விஜய், தனது ரசிகர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். அந்த அறிக்கையாவது சூட்டை கிளப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
Share