Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, June 7, 2012

பிகினியில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை! - அமலாபால்!!

முதல்படத்திலேயே மாமனாருடன் சல்லாப காட்சியில் தைரியமாக நடித்தவர் நடிகை அமலாபால். மைனா படம் மூலம் உச்சத்திற்கு சென்ற அவர் தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை  போன்ற படங்களில் நடித்தார். இருந்தும் அதன்பிறகு ‌தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு பக்கம் போனார். அங்கும் சரிபடவாய்ப்புகள் இல்லாததால் இப்போது தனது சொந்த ஊரான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு பிகினி வேடத்தில் நடிக்க எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய சூழலில் கிளாமர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது வளர்ந்து வரும் நடிகைகளும் கூட பிகினியில் நடிக்க தயாராகி வருகின்றனர். எனக்கும் பிகினி உடையில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
Share

Wednesday, June 6, 2012

கார்த்தியின் பிரியாணியில் சமந்தா...!

வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி நடிக்க இருக்கும் பிரியாணி படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிக்க இருக்கிறார். மங்காத்தா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கட்பிரபு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தலைப்பாக பிரியாணி என்றும், கூடவே படத்தில் அடைமொழியாக ஏ வெங்கட்பிரபு டயட் என்றும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. இதற்காக சமீபத்தில் சோனா கொடுத்த விருந்து நிகழ்ச்சியை கூட தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது சட்டென்று சமந்தாவை தேர்வு செய்துள்ளாராம் வெங்கட்பிரபு என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் சமந்தாவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு. அவர் தமிழில் நடித்து வெளிவந்தது இரண்டு படங்கள் தான் என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர தமிழில் மணிரத்னத்தின் கடல், கவுதமின் நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய டைரக்டர்களும் சமந்தாவை மொய்க்க தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழில் நம்பர்-1 நடிகையாக சமந்தா வருவார் எனத் தெரிகிறது.
Share

Monday, February 13, 2012

ரேஸ்-2 படத்திலிருந்து தீபிகா விலகியதன் காரணம்

இந்தி படமான ரேஸ்-2 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா விலகிவிட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி பாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன்.
இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதுகுறித்து அவர் கூறியதாவது, கோச்சடையான் படத்திற்காக ரேஸ்-2 படத்திலிருந்து விலகவில்லை. ரொம்ப நாளைக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது.
ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டு உள்ளனர். இதனால் என்னுடைய கால்ஷீட் வீணானது. எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். இதுகுறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. நான் பதிலளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்
Share

Sunday, February 12, 2012

கோச்சடையானில் ரஜினியுடன் இணையும் சரத்குமார்

பத்திரிகையாளராக இருந்து கடின உழைப்பால் இன்று ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, சினிமா, அரசியல், நட்சத்திர கிரிக்கெட் என சரத்குமாரின் வளர்ச்சி எல்லாரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் சில பத்திரிகை குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கினார்.
அவர் பேசுகையில் கடந்த சில வருடங்கள்  என் படங்களை வாங்க வணிக ரீதியாக சில பிரச்னைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து, இப்போது நான் ரொம்ப பிசியா இருக்கேன்.
மலையாளத்தில் நான் நடித்த பழசி ராஜா படம் என்னை பேச வைத்தது, தளபதியாக சரித்திர ரோலில் மம்முட்டியுடன் நடித்தது மறக்க முடியாது. தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டிருக்கேன்.
தற்போது கூட அச்சண்ட ஆண்மக்கள் என்ற படத்தில் கோவை பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதை அடுத்து கன்னடத்தில் தர்ஷன் ஹீரோவா நடித்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்றேன். சூப்பர் ஹிட் படம் தொடர்ந்து நடிக்க கதை கேட்டு வருகின்றேன்.
தெலுங்கில் சில படங்களில் நான் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா படம் மிக பெரிய பேரை தந்தது. அந்த படத்தில் அரவாணி ரோலில் நடிக்க வேண்டும் என்று லாரன்ஸ் கேட்ட போது உடனே சரி சொன்னேன், எனக்கு ஒரு பெரும் பேர் கொடுத்த படம் காஞ்சனா.
தமிழ்ல சினேகாவுடன் நான் நடித்த விடியல் படம் பாதியில் உள்ளது. அந்த படம் கூட சுதந்திரம் முன், சுதந்திரம் பின் என்று எடுக்கப்படும் படம். இதை அடுத்து நம்ம ஊரில் நடந்த உண்மை சம்பவம் மூளை சாவில் இறந்த ஒருவரின் இதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் பிழைக்க வைத்த கதை. இதை மலையாளத்தில் டிராபிக் என்று படமாக்கி இருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் இப்போது தமிழில் எடுக்க போகிறோம். அதில் நான் உயிர் காப்பாற்றிய டிரைவராக நடிக்க போறேன்.
மேலும் ராதிகா, பிரகாஷ் ராஜ், ரம்யா நபீசன் போன்றோர் நடிக்க உள்ளனர். மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்போது எல்லாரும் கேட்டு கொண்டிருக்கும் செய்தி நான் ரஜினியுடன் நடிக்க போவது சௌந்தர்யா இயக்கும் படத்தில் நான் ரஜினியுடன் நடிக்க போறேன்.
இப்பதான் போட்டோ சூட் முடிந்தது ரொம்ப ஆர்வத்தோட இருக்கேன் ரஜினியுடன் நடிப்பதற்கு. என் அரசியல் வாழ்க்கையும் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு தென்காசியில மாதம் சில நாட்கள் தங்கி இருந்து அந்த பணியையும் சிறப்பாக செய்கிறேன்.
அங்கு எனக்கு சில ஆட்கள் உதவி செய்கின்றனர். நடிகர் சங்கத்திலும் என் பணியை திட்டமிட்டு செய்கிறேன். இப்போது பெப்சி பிரச்சனை குறித்து இரு தரப்பிலும், நாங்களும் பேசி வருகிறோம்,. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
என் மகள் வரலெட்சுமி பத்தி சொல்லனும்னா அவங்களோட மியூசிக் டான்ஸ் ஆர்வம் பார்த்தேன். சினிமான்னு அவங்க முடிவு பண்ணி அனுபம் கேர் நடிப்பு கல்லூரியில் சேர்த்துவிட சொன்னாங்க. சேர்த்து விட்டேன். நல்லா முடிச்சிட்டு வந்திட்டாங்க.
இப்ப சிம்புவுடன் போடா போடி படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. அப்புறம் நாகார்ஜுன் மகனுடன் தமிழ் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க போறாங்க, இனி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நல்ல படங்கள் பண்ணுவேன் என்றார்.
Share

Thursday, February 9, 2012

அரசியல் எனக்கு தெரியாது: அஜித்

எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது என நடிகர் அஜித் அதிரடியாக கூறியுள்ளார்.
தற்போது பில்லா-2 படத்தில் மும்மரமாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல் ஏற்கனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது.
நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன்.
அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது அதில் எனக்கு விருப்பமும் கிடையாது என்று கூறியுள்ளார்.
Share

Tuesday, February 7, 2012

பாலிவுட் படத்தை இயக்கும் பிரகாஷ் ராஜின் மனைவி

தான் இயக்கும் பாலிவுட் திரைப்படத்திற்கு பிரகாஷ் ராஜ் யோசனைகள் வழங்குவார் என்று போனி வர்மா தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் பிரபல நடன இயக்குனரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜின் காதல் மனைவியுமான போனி வர்மா பாலிவுட் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

விரைவில் வெளியாக உள்ள தோனி திரைப்படத்தை இயக்கி, தயாரித்துள்ள பிரகாஷ் ராஜுக்கு பக்க பலமாக மனைவி போனி வர்மா இருந்துள்ளார்.
என் கணவர் பிரகாஷ் ராஜ் நிறைய மொழிப்படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்ததில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் எனக்கு பிடித்த திரைப்படமாகும்.

அவருடைய இயக்கத்தில் தோனி திரைப்படம் வெளியாக உள்ளநிலையில் நானும் திரையுலகில் இயக்குனராக வலம் வர முடிவெடுத்துள்ளேன்.
சினிமாவில் நடன இயக்குனராக இருந்து, திரைப்படங்களை இயக்கி வெற்றிக்கண்டவர்களை நான் அறிந்துள்ளேன். எனவே அறிமுக இயக்குனராக பாலிவுட் படத்தை இயக்கவுள்ளேன்.
என்னுடைய இயக்கத்தின் மூலம் அட்டகாசமான மசாலா பொழுது போக்கு திரைப்படத்தை ரசிகர்களுக்கு தருவேன். இத்திரைப்படத்தில் என் திரையுலக நண்பர்களில் ஒருவர் நாயகனாக நடிப்பார் என்றும் தனக்கு பிரகாஷ்ராஜ் இயக்குவதற்கான யோசனைகளை தருவார் எனவும் போனி வர்மா கூறியுள்ளார்.
Share

Friday, February 3, 2012

ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகும் மாற்றான்




கொலிவுட்டில் ஏழாம் அறிவு படத்தினைத் தொடர்ந்து மாற்றான் திரைப்படத்திற்காக சூர்யா அதிக திகதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார். அயன் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி மாற்றானில் இணைகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் சூர்யா ஒரு உடலில் இரு தலை உடையவராக நடித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அத்தகவலை கே.வி.ஆனந்த் மறுத்தார். ஆனால் இப்படத்தில் சூர்யாவின் தோற்றமும் பாத்திர படைப்பும் நிச்சயமாக தமிழ் சினிமாவிற்கு புதிதாக அமையும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மாற்றான் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக சூர்யா-கே.வி.ஆனந்த் இருவரும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள். உலக அளவிதெல் வரவேற்பைப் பெற்ற ஆங்கிலப் படங்களான AVATAR, JURASSIC PARK, TERMINATOR படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த STAN WINSTON STUDIOS இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் அந்த ஸ்டுடியோவுக்கு சென்று, மாற்றான் படத்தில் சூர்யாவின் ஒரு பாத்திரத்திற்கு எப்படி கிராபிக்ஸ் செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.






Share

Monday, January 30, 2012

நடிகையின் கணவரை தாக்கிய ஷாருக்கான்



பாலிவுட் நடிகை பாராகானின் கணவரை ஷாருக்கான் தாக்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அக்னி பாத் திரைப்படத்தில் கிருத்திக் ரோஷன், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
அக்னிபாத் வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் சஞ்சய் தத், மும்பை புறநகரில் உள்ள நட்த்திர விடுதி ஒன்றில் திரையுலக நடிகர்களுக்கு விருந்து வைத்தார்.
இந்த விருந்தில் பாலிவுட் நடிகர் பாரா கானின் கணவர் ஷிரிஷ் குந்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நேற்று காலை வரை நீடித்த இந்த விருந்தில் அதிகாலை(இந்திய நேரம்) 4.30 மணி அளவில் ஷாருக்கான் எதிர்பாராத விதமாக வந்து ஷிரிஷ் குந்தரை தாக்கினார்.
இதைப்பார்த்த நடிகர் சஞ்சய் தத், சண்டையை விலக்கி ஷாருக்கானை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷிரிஷ் குந்தரின் நண்பர் ஒருவர் கூறுகையில், ஷாருக்கானின் ரா ஒன் திரைப்படத்தை ஷிரிஷ் குந்தர் விமர்சித்தார். இதையடுத்து பிரியாங்கா சோப்ராவுடனும் ஷாருக்கானை இணைத்தும் பேசினார்.
இதன்காரணமாக, ஷிரிஷ் குந்தரை ஷாருக்கான் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்
Share

28வது பிலிம்பேர் விருது வாங்கியுள்ள ஏ.ஆர். ரஹ்மான்

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகிவுள்ள ராக்ஸ்டார் திரைப்படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 57வது பிலிம் பேர் விருதிற்கான முடிவுகள் நேற்று( 29.1.2012) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ராக்ஸ்டார் திரைப்படத்திற்கு இசையமைத்த ஓஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது அவரது 28வது பிலிம் பேர் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ராக்ஸ்டார் திரைப்படம் எனக்கு ஒரு மயில்கள் போன்றது, இதை என் நெஞ்சின் பக்கத்தில் வைத்து கொண்டாடி வருகிறேன்.
இத்திரைப்படத்திற்கான இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் ராக்ஸ்டார் திரைப்படத்தில் நடித்த ரன்பீர் கபூருக்கு சிறந்த கதாநாயகன் விருதும், டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த கதாநாயகி விருதும் அளித்து, அவர்களை பிலிம்பேர் நிறுவனம் பெருமைப்படுத்தியுள்ளது.
Share

பிரகாஷ்ராஜூக்கு பாலச்சந்தர் அறிவுரை!

நடிகர், தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் தோனி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

மனிதர், மற்றவர்களைப்போல பிரகாஷ்ராஜை பக்கம் பக்கமாக பாராட்டி விட்டு தான் போக வேண்டும் என்று வந்திருந்தாலும்., அவரையும் மீறி அடிக்கடி.,  பிரகாஷ்ராஜை சில சமயங்களில் எனக்கும் பிடிக்கும் பல சமயங்களில் எனக்கு பிடிக்காது. என்ன இப்படி பண்றான்? அப்படி பண்றானே..? இது தப்பில்லையா..? என அடிக்கடி அவனைப்பற்றி யோசிப்பேன். இப்பொழுது கூட நிறைய தவறுகள் செய்து கொண்டிருக்கிறான்.அவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை! ஆனாலும் அவனது திறைமையை மதித்து நான் வாழ்த்த வந்திருக்கிறேன்.. என்று எதையோ சொல்ல வந்தவர்., சுதாரித்துக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ் ஷூட்டிங் 6 மணிக்கு என்றால் 10 மணிக்கு வருவதும், சில சமயங்களில் வராமலே போவதும் கேள்விப்பட்டு எனக்கு கோபம்,கோபமாக வரும்! என்னிடம் இன்னமும் பணிவாகத்தான் இருக்கிறான். அவன் பீக்கில் இருந்தபோது அவனை எனது டி.வி., சீரியலில் நான் நடிக்க வைத்ததை பார்த்து பலரும் பலவாறாக டி.வி., சீரியலில் நடிக்காதே என அவனிடம் சொல்லியும், அவர் என் குருநாதர்., அவர் மேலே இருந்ெது கீழே குதி என்றால் நான் குதிப்பேன் என்று அவன் பேசியது என் காதுகளுக்கு வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதே நேரம் பிற தவறுகளையும் அவன் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கே.பாலச்சந்தர் தவறு என்று பேசவந்தது அவர் லலிதகுமாரியை பிரிந்து போனிவர்மாவை திருமணம் செய்து கொண்டதைத்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம்! நிஜம் என்ன என்பது இயக்குநர் சிகரத்திற்கே வெளிச்சம்
Share

Sunday, January 29, 2012

துப்பாக்கி திரைப்படத்தை வாங்கிய ஜெமினி நிறுவனம்

விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி.
ஏ.ஆர்.முருகாதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து நடிகர் விஜய் தன் உயர் நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
Share

Friday, January 27, 2012

தமன்னாவின பக்தி!

நடிகை தமன்னா தற்போது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான் இருக்கிறார். சும்மா ஓடி, ஓடி நடிக்கிறார்.

ஆனால் தற்போது தமன்னாவைப் பார்ப்பவர்கள் என்னாச்சு இந்த பொண்ணுக்கு இப்படி பக்தி மானாய் மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறார்களாம். என்ன நம்ப முடியவில்லையா, அட நம்புங்கப்பா. ஹைதராபாத் வந்தால் போதும் தமன்னா கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம். அட அப்படி என்ன தான் உருகி, உருகி வேண்டுகிறார் என்று தான் தெரியவில்லை. மும்பைக்கு சென்றால் தனது வீட்டில் ஹோமம், பூஜை நடத்துகிறாராம். தற்போது தமன்னா இருக்குமிடம், போகுமிடமெல்லாம் பக்தி மயமாக உள்ளது.
Share

நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!

நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த ஆண்டி, பண்டார சமூகத்தினர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
Share

Monday, January 23, 2012

மாற்றான் திரைப்படத்திற்கான வெளியீட்டு திகதி ஒத்தி வைப்பு


தமிழ் திரையுலகில் சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் மாற்றான் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொலிவுட்டில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரு வேடங்களில் மாற்றான் திரைப்படத்தின் நடித்து வருகிறார்.
சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
மாற்றான் படப்பிடிப்பு ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்றுள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கிய அயன், கோ திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலமான வெற்றி பெற்றுள்ளதால் மாற்றானின் வருகையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மாற்றான் திரைப்படம் தமிழ் புத்தாண்டிற்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இறுதிகட்ட வேலைகள் இன்னும் நிறைவடையாததால் வெளியீட்டு திகதி சூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Share

சுரேஷ் கோபியை வறுத்தெடுக்கும் மலையாளிகள்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள நட்சத்திரங்கள் பலர் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பாதகமில்லாத நடுநிலையான நிலைபாட்டில் இருந்துகொண்டு மீடியாவைக் கவர்ந்து வருகிறார்கள். மம்முட்டி சத்தமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். தற்போது நிபுணர் குழு அறிக்கை தமிழகத்துக்கு சாதகமாக வந்திருக்கும் நேரத்தில் தமிழகம், கேரளா என இரண்டு மாநிலங்களிலும் பிரச்சினை மேலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்று நினைக்கும் முன்னணி மலையாள நட்சத்திரங்களான, சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இயக்குநர்கள் சித்திக், கமல் உள்ளிட்ட சில பிரபலங்கள், இருதரப்புக்கும் பாதகமில்லாத முடிவு வேண்டி ஒரு அமைதிப் பிரார்த்தனையை நடத்தியிருக்கிறார்கள். "வன்முறை மேலும் பிரச்சினையை ஏற்படுத்துமே தவிர, தீர்வு ஏற்பட வழி வகுக்காது, இந்தப் பிரச்சினைக்கு கோர்ட் நல்ல ஒரு தீர்ப்பை வழங்கும். அதை இருமாநில மக்களும் அமைதியாக ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்று கூறியிருக்கிறார் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபியின் இந்த நடுநிலையான பேச்சுக்குகே அவரை வறுத்து எடுக்கிறார்களாம் மலையாளிகள். இதைவிட மம்முட்டி மீது செம காட்டத்தில் இருக்கிறார்களாம். காரணம் ஜெயலலிதாவை எதற்காக சந்தித்தார் என்பதை இன்னும் மீடியாவுக்குச் சொல்லவில்லை என்பதுதான் காரணம் என்கிறார்கள்.
Share

Sunday, January 22, 2012

விஜய்யை அடிக்க தயங்கிய ஸ்ரீகாந்த்...!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள நண்பன் படம் மூலம், நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது என்றால் அதுமிகையல்ல. விஜய், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தும் நண்பன் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நண்பன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய்யை, ஜீவாவும், ஸ்ரீகாந்தும் அடிப்பது போன்று ஒரு காட்சி. ஆனால் இந்த காட்சியில் நடிக்க தயங்கியதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜீவாவும், நானும் விஜய்யை அடிப்பது போன்று காட்சி. ஆனால் இதில் நடிக்க நான் தயங்கினேன். பிறகு விஜய்யே வந்து தயங்காதீர்கள், இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அந்தகாட்சியில் நடித்தேன். விஜய் ‌சொன்னது போன்று பலரும் அந்தக்காட்சியை பாராட்டினார்கள். சூட்டிங்கில் மூவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். நண்பன் படம் மூன்று ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மூவருக்கும் சமமான கேரக்டர் தான். இதனால் மூவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அப்படி ஒரு கேரக்டரை அமைத்து கொடுத்த டைரக்டர் ஷங்கர் சாருக்கு நன்றி. ஷங்கர் சார் டைரக்டர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் கூட. அவர் எப்படி நடிக்க சொன்னாரோ, அதன்படி அப்படியே நடித்தேன் என்றார்.
Share

100 கோடியை தாண்டும் நண்பன்

நண்பன் திரைப்படத்தி்ன் வசூல் 100 கோடியை தாண்டும் என்று தமிழ் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் நண்பன்.
ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் என்பதால் நண்பன் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் திகதியே படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் முதல் வாரத்திலேயே சுமார் 40 கோடியை எட்டியுள்ளது.
படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூல் கிடைத்துள்ளது.
எந்திரன் திரைப்படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை உட்பட அனைத்தையும் கணக்கிட்டால் நண்பன் திரைப்படம் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறது தமிழ் திரையுலக வட்டாரங்கள்.
இதுவரை எந்த ஒரு விஜய் திரைப்படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து நண்பன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share

Saturday, January 21, 2012

என் ஆசை நண்பன் படத்தில் நிறைவேறியிருக்கிறது : விஜய் பேட்டி...!

தன்னை வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, நண்பன் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று விஜய் கூறியுள்ளார். நடிகர் விஜய்க்கு இந்தாண்டு துவக்கமே சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரது நண்பன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், வசூலையும் பெற்றுள்ளது. இதனால் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார் விஜய். அந்த உற்சாகத்தோடு சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 3-இடியட்ஸ் படம் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது. அதனால் அந்தபடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கேற்றாறு போல டைரக்டர், தயாரிப்பாளர் என அனைத்தும் அமைந்ததால் நண்பன் படத்தில் நடித்தேன். படமும் நன்றாக வந்துள்ளது. எல்லா தியேட்டர்களிலும் நல்ல வசூல் என்று செய்திகள் வருகிறது. இதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

பொதுவாக என்னுடைய படத்தில் பஞ்ச் டயலாக்குகளை திணிக்க விரும்ப மாட்டேன். அதேசமயம் சீன்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பேசுவேன். அதேபோல் என்னுடைய படத்தில் அதிரடி காட்சிகளும் இருக்கும். அதில் ஒரு வகையான ஹீ‌ரோயிசம் தெரியும். ஆனால் நண்பன் படம் அப்படியில்லை. பஞ்ச் டயலாக் கிடையாது, அதிரடி கிடையாது. அது ஒரு வித்தியாசமான கேரக்டர். என்னை வித்யாசமாக பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அது நண்பன் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், என்னை எனது அப்பா டாக்டராக்க ஆசைப்பட்டார். ஆனால் எனக்கோ நடிப்பில் தான் ஆர்வம் இருந்தது. அதனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அதேபோல் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது பிள்ளைகள் எந்த துறையில் ஆர்வம் காட்டுகிறார்களோ, அதில் அவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
Share

ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு : ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!

ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைக்கும் போது பலமுறை ஆய்வு செய்து தான் இசையமைக்கிறேன். அப்படி இருக்கையில் ஒரு சிலர், ஹோசன்னா பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ஏக் திவானா தா. தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீ-மேக் ஆன இந்தப்படத்தை,  கவுதம் மேனனே இந்தியிலும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஹோசன்னா என்ற பாடலுக்கு சில கிறிஸ்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த படமாக இருந்தாலும், அந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் முன் பலமுறை ஆய்வு செய்து தான் இசையமைப்பேன். அதேபோல் தான் ஹோசன்னா பாடலுக்கும், இசையமைக்கும் முன் என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின்னர் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். அதுமட்டுமல்ல இந்தியில் வெளிவருவதற்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பல விருதுகளும் இந்தபாட்டுக்கு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஒருசிலர் இந்த பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை இப்பாடல் யார் மனதையும் புண்படும்படியாக அமைந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு நான் பாடல் வரிகள் எழுதியுள்ளேன். ஆனால் ரஹ்மானை போன்று ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. யாரும் மனதையும் புண்படும்படியாக அவர் நடந்து கொள்ள மாட்டார். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
Share

Friday, January 20, 2012

விஜய் வேடத்தை மாற்றிய இயக்குனர் முருகதாஸ்

இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. கொலிவுட்டில் இளையதளபதி விஜய், முருகதாஸ், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கி படம் வேகமாக உருவாகி வருகிறது.
துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு துப்பாக்கியை தயாரிக்கிறார்.
இந்தப்படத்துக்காக நாயகன் விஜய்யின் வேடத்தை இயக்குனர் முருகதாஸ் மாற்றியுள்ளார்.
இந்தப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை வானகரம் சந்தையில் சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்கள்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தன்னுடைய படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடாது என்பதற்காக, பணிகளை வேகமாக விஜய் முடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share