Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Sunday, December 11, 2011

சிம்புவுடன் ஜோடி போடும் ஹன்சிகா!

 மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்த ஹன்சிகா உதய நிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை முடித்த கையோடு சிம்புவுடன் ஜோடி போட உள்ளார். ஒஸ்தி படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் வேட்டை மன்னன். இந்தபடத்தில் விஜய் டி.வி யில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி நடத்திய நெல்சன் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். எஸ் எஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். சிம்புவுடன் நடிப்பது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டால் உற்சாகமாக பதில் சொல்கிறார். நான் சின்ன வயசிலே நடிக்க வந்திட்டேன். ஹிந்தியில் ஹிரித்திக் கூட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். தெலுகுலயும் நடிக்கிறேன். சோ எனக்கு பயம் அப்படின்னு ஏதும் இல்ல, பொலிடிகல் சயின்ஸ் இப்பதான் லண்டன் யுனிவர்சிட்டில முடிச்சேன். என் அம்மா பம்பாய்ல ஸ்கின் டாக்டரா  இருகாங்க. நான் நடிக்க வந்ததே ஆசை பட்டு தான். ஆனா தமிழ் இவ்ளோ சீக்கிரம் பெரிய நடிகர்கள் கூட நடிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாரும் நான் ரொம்ப கிளாமரா நடிகிறேனு சொல்றாங்க, என் ரசிகர்கள் விரும்பும் வரை கிளாமர நடிப்பேன். இப்ப கூட சிம்பு கூட ஜோடிய நடிக்கிறேன், நான் ரொம்ப கம்பார்டபுளா இருக்கேன், என் தமிழ கேட்டு சிம்பு ரொம்ப சிரிப்பார். எனக்கு இப்ப கொஞ்சம் தமிழ் வார்த்தைகள் தெரியும், சீக்கிரம் தமிழ் பேசுறேன் பாருங்க என்றவர் சிம்புவுடன் டான்ஸ் பண்ண தான் கொஞ்சம் பயப்படுகிறார்.
Share

Friday, October 7, 2011

ஒஸ்தி'க்காக ஒத்த காலில் நிற்கும் சிம்பு

போகிற போக்கை பார்த்தால் ஒரே ஒரு படத்தை தவிர மற்ற படங்களுக்கு டூரிங் டாக்கீஸ்கள்கூட கிடைக்காது போலிருக்கிறது. கோடம்பாக்கத்தை ஒரேயடியாக அதிர வைத்திருக்கிறது '7ஆம் அறிவு' படத்தின் வியாபாரமும் அதற்கான வரவேற்பும். இதற்கு முன் வந்த தீபாவளிகளில்கூட பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளிவரும். அவற்றில் சில வெற்றியையும் சில அந்த வாய்ப்பையும் இழக்கும். ஆனால் இந்த முறை '7ஆம் அறிவு' முந்திக் கொண்டதால், மற்ற படங்களுக்கு லேசான மந்தநிலை நிலவுவதாக காதைக்கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினாலும், தியேட்டர்காரர்கள்தான் சில விஷயங்களை தீர்மானிக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் தியேட்டர் அட்வான்ஸ் என்ற கணிசமான தொகையைதான் சேர்த்து சேர்த்து ஒரு பெரும் தொகையாக உருவாக்கி தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு பெட்டியை எடுத்துச் செல்வார் விநியோகஸ்தர். இப்படி வழங்கப்படும் தியேட்டர் அட்வான்ஸ் தொகை ஒரே படத்தில் முடக்கப்பட்டிருப்பதுதான் பெரும் சிக்கலை உருவாக்கும் போலிருக்கிறது. இதோடு சேர்ந்து காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவ ஆரம்பித்திருப்பதால், வரும் என்று எதிர்பார்க்கப்படும் சில முக்கியமான படங்கள்கூட ஒரு வாரம் தள்ளி வெளியிடப்படும் நிலை ஏற்படலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், நான் 'ஒஸ்தி'யை கொண்டு வருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார் சிம்பு. கால ஒடச்சிக்காம இருந்தா சர்தான்.....!
Share

Tuesday, March 22, 2011

அனுஷ்காவை புகழ்பாடும் சிம்பு !

சிம்பு - அனுஷ்கா ஜோடி நடித்துள்ள வானம் பட இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்காவை புகழ்ந்து தள்ளினார் நடிகர் சிம்பு. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சிம்பு தற்போது வானம் படத்தில் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் எவன்டி உன்னப் பெத்தான்... எனத் தொடங்கி தொடரும் ஒரு பாடலை எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுஒருபுறம் இருக்க தடபுடலாக இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்திருக்கிறார் சிம்பு. இசை வெளியீட்டு விழாவில் வானத்தை வெளியிடும் கிளவுட் நைன் மூவிஸ் தயாநிதி அழகிரி, சிம்பு, அனுஷ்கா, தயாரிப்பாளர்கள் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ், பரத், சோனியா அகர்வால், சரன்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, டைரக்டர் வெற்றிமாறன், வானம் டைரக்டர் கிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சிம்பு அனுஷ்காவை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளினார். இந்த படத்தின் டைரக்டர் கிரிஷ் 10 கவுதம் மேனன், 20 பாலாவுக்கு சமம். ஏனென்றால் அவரை சிபாரிசு செய்தவர் அனுஷ்கா. இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீ-மேக்தான் வானம். தெலுங்கில் நாயகியாக அனுஷ்காதான் நடித்திருந்தார். கிரிஷ் இயக்கியிருந்தார். படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்ததுமே கதாநாயகியாக அனுஷ்காவையே நடிக்க வைக்க முடிவு செய்தோம். அனுஷ்கா சிபாரிசின் பேரில் நானும், தயாரிப்பாளர் கணேசும் டைரக்டர் கிரிஷை அழைத்து பேசினோம். 10 நிமிடங்கள்தான் பேசினோம். அந்த பத்து நிமிடமும் வேதம் படத்தில் அவர் செய்த தவறுகளை மட்டுமே பேசினார். அந்த கதையில் எந்த அளவுக்கு அவருக்கு ஈடுபாடு இருந்தால், செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார் என்று கருதி, அவரையே டைரக்டராக ஒப்பந்தம் செய்தோம், என்று கூறியதுடன், அனுஷ்கா நல்ல நடிகை; சூட்டிங் நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார், என்றும் கூறினார் சிம்பு.


. Share

Tuesday, March 15, 2011

ஒரு கோடியில் எவன்டி உன்ன பெத்தான்... பாடல்

தமிழில் வானம் படத்தில் இடம்பெற்றுள்ள "எவன்டி உன்ன பெத்தான்..." என்ற பாடல் இந்தியில் ஆல்பமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆல்பத்தை ஒரு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கின்றனர்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான "வேதம்" படம் தமிழில், "வானம்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்பு ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். படத்தில் சிம்பு தானே, ஒரு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். "எவன்டி உன்ன பெத்தான்... பெத்தான்... கையில கிடைச்சா செத்தான்... செத்தான்..." என்று ஆரம்பிக்கும் இப்பாடல் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் இப்படால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர்தான் இப்பாடலுக்கு மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பாடல் பெண்களை இழிவு படுத்துவதாகவும், ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இருப்பதாகவும், தொடர்ந்து சிம்பு இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.


இதனிடையே இப்பாடலை கேட்ட பாலிவுட் நிறுவனம் ஒன்று, இந்தியில் ஆல்பமாக தயாரிக்க சிம்புவிடம் கேட்டுள்ளது. பாலிவுட் என்றதும், ஓ.கே. சொல்லிய சிம்பு, இப்பாடலுக்கான வேலையில் இறங்கியுள்ளார். மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கும் இந்த ஆல்பத்தில் சிம்புவே பாடலை எழுதி, பாடி, ஆடவும் இருக்கிறார். இவருடன் லண்டனை சேர்ந்த 30 நடன கலைஞர்களும் ஆட இருக்கின்றனர். ரூபாய் 1கோடி செலவில் எடுக்கப்படும் இந்த ஆல்பத்தை, பிரபல நடன இயக்குநர் அகமது கான் டைரக்ட் செய்கிறார்.  
Share