Sunday, July 1, 2012

ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது

ஐரோப்பிய கிண்ண இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் ஸ்பெயின் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி கடந்த ஜுன் மாதம் 8ஆம் திகதி போலந்து மற்றும் உக்ரேனில் தொடங்கியது.
இந்த போட்டியில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த முன்னணி 16 அணிகள் பங்கு பெற்றன. இதில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான ஜேர்மனி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி நேற்று உக்ரேனின் கீவ் நகரில் நடைபெற்றது.





Share