Thursday, June 28, 2012

சென்னை சூப்பர் கிங்ஸ்லிருந்து டோனி விலகலா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 5 ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்து வழிநடத்திய இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி, தற்போது அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்ட டோனி கடந்த 5 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஐ.பி.எல் தொடரில் வழிநடத்தி வருகிறார்.
இவரது சிறப்பான வழிநடத்தல் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
Share