Friday, January 20, 2012

அச்சத்தில் அதர்வா!?

 ஹீரோ பந்தா என்பது சினிமா உலகத்தில் சர்வ சாதாரணமான ஒன்று. ஆனால் இந்த பம்மாத்து ஒரு சில டைரக்டர்களிடம் ஒர்க் அவுட் ஆகாது. அந்த டெரர் டைரக்டர்கள் லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குநர் பாலா.

அப்படி அதிகப்படி கிடுக்கிப்பிடி இருந்தாலும் கூட பாலா படத்தில் நடித்து விட மாட்டோமா என ஏங்கும் ஹீரோக்கள் ஏராளம். ஏனென்றால் பாலா படத்தில் நடித்துவிட்டால் இன்டஸ்ட்ரியில் நல்ல ஒரு பிரேக் கிடைக்குதுல..! அதனாலேயே நடிகர் அதர்வாவும், எதைப் பற்றியும் யோசிக்காமல் எரியும் தணலில் நடிக்க உடனே ஒகே சொன்னார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ விஷயம் என்னவென்றால், அதர்வா அமலாபாலுடன் ஜோடி போட்டு நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தில் அதர்வா போர்ஷன்ஸ் எல்லாம் ஓவர். அதனால் எரியும் தணல் படப்பிடிப்பில் இறங்கினார் அதர்வா. ஆனால் முப்பொழுதும் உன் கற்பனைகள் டப்பிங் பாக்கியிருப்பதால், அதற்கு வருமாறு ஓயாமல் நூல் விட்டுக்கொண்டிருக்கிறதாம் அந்த டீம். எரியும் தணல் ஷூட்டிங் இப்போது தான் ஆரம்பித்திருக்கும் நிலையில், இயக்குநர் பாலாவிடம், லீவு கேட்க தயங்கி, அஞ்சி, வருகிறாராம் அதர்வா!!
Share