Thursday, December 22, 2011

அனுஷ்கா இடத்தில் அமலாபால்

  


தெலுங்கு திரையுலகில் பேஜ்வாடா திரைப்படத்தில் அனுஷ்காவிற்கு பதிலாக அமலாபால் நடிக்கிறார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியான அனுஷ்கா, நாயகன் நாகா சைதன்யாவுடன் பேஜ்வாடா என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒப்பந்தமானார்.
இத்திரைப்படத்தை விவேக் கிருஷ்ணா இயக்குகிறார். ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார்.
ஆனால் நாயகி அனுஷ்காவுக்கு தமிழ் திரையுலகில் கார்த்தியுடன் சேர்ந்து சுராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இதனால் தெலுங்கு திரைப்படமான பேஜ்வாடாவில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து தற்போது நாயகி அமலா பால் பேஜ்வாடாவில் நடிக்கிறார்.
மேலும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் திரைப்படத்தில் நாயகன் மகேஷ்பாபு, வெங்கடேஷ் இருவரும் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திலும் நடிக்க அனுஷ்காவை ஒப்பந்தம் செய்தார்கள்.
ஆனால் தமிழில் நடித்துக் கொண்டிருப்பதால் இதிலும் அனுஷ்காவால் நடிக்க முடியாமல் போனதையடுத்து, தற்போது இந்த வாய்ப்புக்காக அமலா பால் போட்டி போடுகிறார்.
Share