Wednesday, December 7, 2011

அமிதாப்பை நேரில் சந்தித்த தனுஷ் : கொலைவெறி பாடலுக்கு பாராட்டு!

மும்பை சென்ற தனுஷ், அமிதாப்பை நேரில் சந்தித்தார். அப்போது ‌தனுஷின் கொலைவெறி பாடலுக்கு அமிதாப் பாராட்டு தெரிவித்தார். மிஸன் இம்பாசிபிள் என்ற ஹாலிவுட் படத்தின் பிரத்யேக காட்சிக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை சென்றார் தனுஷ். அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, அபிஷேக் பச்சன் நேரில் வந்து அழைத்து, அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். தனுஷை, அமிதாப்பச்சன் வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்றார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் தனுஷ் எழுதி, பாடி பட்டி, தொட்டியெல்லாம் பிரபலமாகியிருக்கும் கொலைவெறிடி பாடலுக்கு பாராட்டு தெரிவித்தார். பாடல்கள் ரொம்ப அருமையாக இருந்தது என்று தனுஷை மனதாரா பாராட்டியுள்ளார் அமிதாப். அதன் பிறகு அபிஷேக் பச்சனும் தனுசும் அங்கிருந்து புறப்பட்டு மிஸின் இம்பாசிபிள் ஆங்கில படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க தியேட் டருக்கு சென்றனர். ஏற்கனவே இப்பாடல் வெளியான புதிதில் அமிதாப் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Share