Tuesday, December 6, 2011

ஹன்சிகாவின் அரசியல் ஆசை!

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இருக்கிறதாம். இதனை பேட்டியொன்றில் தெரிவித்திருக்கும் அவர், ஆனால் அரசியலுக்கு வருவேனா என்பதை தற்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று கூறியிருக்கிறார். தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துக் கொண்டே அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதி முடித்துள்ளார். இதையடுத்து இனி முழுநேரமும் சினிமாவில் கவனம் செலுத்தவிருக்கிறார்.

தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்து வருகிறார். படிப்பை முடித்து விட்ட நிலையில் தனது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து அம்மணி அளித்துள்ள பேட்டியில், நான் பட்டப்படிப்பை முடித்துவிட்டேன். இனி ஃபுல்டைம் சினிமா தான். தமிழ் மற்றும் தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல கதாபாத்திரங்களைப் பார்த்து தான் தேர்வு செய்வேன். பொலிடிக்கல் சயின்ஸ் படித்துள்ளதால் எனக்கு அரசியல் ஆர்வம் உள்ளது. அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். அதற்காக நான் அரசியலுக்கு வருவேனா என்று தற்போது சொல்ல முடியாது. எதிர் காலத்தில் எதுவும் நடக்கலாம், என்று கூறியுள்ளார்.
Share