Monday, November 28, 2011

மனைவிக்கு, கணவன் மரியாதை தர வேண்டும் : செல்வராகவன்!

அவரவர் மனைவிக்கு, கணவன்மார்கள் மரியாதை அளித்தாலே, அந்த பெண் கணவனுக்காக எதையும் செய்வாள் என்று கூறுயுள்ளார் டைரக்டர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கத்தில், அவரது தம்பி தனுஷ் நடித்துள்ள படம் "மயக்கம் என்ன". கடந்தவாரம் ரிலீசான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தில் மனைவிக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது போல அமைத்து இருந்தார் செல்வராகவன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மயக்கம் என்ன படத்தில் பெண்களின் உணர்வுகளை, ஆண்கள் புரிந்து நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். பெண்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அதிலும் ஒருவனுடைய வாழ்க்கை துணையாக வரும் மனைவிக்கு, கணவன் நிச்சயம் மரியாதை அளிக்க வேண்டும். மனைவிக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தாலே, அந்த பெண் கணவருக்காக எதையும் செய்வாள். படத்திலும் அந்த கருத்தை தான் சொல்லியிருப்பேன் என்று கூறியுள்ளார்.
Share