Tuesday, September 13, 2011

வெளிநாட்டு படங்களை காப்பியடிக்கிறவங்களால் அவமானம்! - செல்வராகவன்



ஜப்பானிய, தென்கொரிய, ஆங்கில படங்களை காப்பியடிப்பவர்களால் தமிழ் சினிமாவுக்கு அவமானம் ஏற்பட்டிருப்பதாக டைரக்டர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், காப்பியடித்து எடுக்கப்படும் படங்களை ஊக்குவிக்கக் கூடாது, என்று கூறியுள்ளார்.

செல்வராகவன் தனது பேட்டியில், இன்ஸ்பிரேஷன்ங்கிற அளவில் மட்டும்தான் பிற நாட்டு விஷயங்களை எடுத்துக்கலாம். ஆனால் ஜப்பானிய தென்கொரிய ஆங்கில படங்களை அப்படியே காப்பியடிக்கிற வழக்கம் பெருகிட்டு இருக்கு. இந்தியா முழுக்க தயாராகிற எழுபது சதவீத படங்கள் இப்படிதான் இருக்கு. இதை மாத்துற சக்தி மீடியாக்கள் கிட்டதான் இருக்கு. இவங்கதான் இப்படிப்பட்ட படங்களை அடையாளம் காட்டணும். தப்பு பண்றவங்க இதை இனிமே பண்ணகூடாதுங்குற அளவில் குதறி எடுக்கணும். இதையெல்லாம் மீடியாக்கள் அனுமதிச்சு பாராட்டும் போது இது தப்பில்லைன்னு ஆகி இன்னும் பத்து பேர் இப்படி எடுக்க ஆரம்பிக்கிறாங்க. உண்மையான கிரியேட்டிவிட்டிக்கு மரியாதை இல்லாம போகுது.

இப்படியே நிலைமை போச்சுன்னா எதிர்கால தலைமுறை இந்த காலத்தை பழிசொல்லும். பிறகு சிறந்த டைரக்டர் யார்னு கேட்டா பர்மா பஜாருக்கு ஓடிப்போய் முதல் டி.வி.டி வாங்கறவர்தான்னு ஆகிடும். இப்படிப்பட்ட படங்களை பட விழாக்களுக்கும் அனுப்புறாங்க. அவங்க பார்த்துட்டு நம்மை பற்றி என்ன நினைப்பாங்க? அவமானமில்லையா அது? கவனிச்சு பார்த்தா மக்கள் இந்த மாதிரி படங்களை கவனமாக தோல்வியடைய வச்சுடுறாங்க. இதுக்கு நடுவில் அங்காடி தெரு, களவாணி, மைனா மாதிரி படங்கள் நட்சத்திரங்களையோ, டி.வி.டி க்களையோ நம்பாம ஸ்கிரிப்டை மட்டுமே முன் வச்சு வெற்றியடையறது ஆரோக்கியமான விஷயம், என்று கூறியிருக்கிறார்.
Share