Thursday, June 28, 2012

அரை இறுதியில் போர்ச்சுகலை வீழ்த்தியது ஸ்பெயின்- யூரோ 2012

 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது அரை உறுதிப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுகல் அணியானது நடப்பு சாம்பியனான ஸ்பெயினிடம் போராடி தோற்றது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இதைத் தொடர்ந்து முதலாவது அரையிறுதி ஆட்டம் டோனட்ஸ்க் நகரிலுள்ள டான்பாச் அரீனா மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணியும் உச்சநட்சத்திரமான ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் மோதின.
Share

Thursday, June 7, 2012

பிகினியில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை! - அமலாபால்!!

முதல்படத்திலேயே மாமனாருடன் சல்லாப காட்சியில் தைரியமாக நடித்தவர் நடிகை அமலாபால். மைனா படம் மூலம் உச்சத்திற்கு சென்ற அவர் தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை  போன்ற படங்களில் நடித்தார். இருந்தும் அதன்பிறகு ‌தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு பக்கம் போனார். அங்கும் சரிபடவாய்ப்புகள் இல்லாததால் இப்போது தனது சொந்த ஊரான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு பிகினி வேடத்தில் நடிக்க எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய சூழலில் கிளாமர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது வளர்ந்து வரும் நடிகைகளும் கூட பிகினியில் நடிக்க தயாராகி வருகின்றனர். எனக்கும் பிகினி உடையில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
Share

Wednesday, June 6, 2012

கார்த்தியின் பிரியாணியில் சமந்தா...!

வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி நடிக்க இருக்கும் பிரியாணி படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிக்க இருக்கிறார். மங்காத்தா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கட்பிரபு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தலைப்பாக பிரியாணி என்றும், கூடவே படத்தில் அடைமொழியாக ஏ வெங்கட்பிரபு டயட் என்றும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. இதற்காக சமீபத்தில் சோனா கொடுத்த விருந்து நிகழ்ச்சியை கூட தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது சட்டென்று சமந்தாவை தேர்வு செய்துள்ளாராம் வெங்கட்பிரபு என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் சமந்தாவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு. அவர் தமிழில் நடித்து வெளிவந்தது இரண்டு படங்கள் தான் என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர தமிழில் மணிரத்னத்தின் கடல், கவுதமின் நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய டைரக்டர்களும் சமந்தாவை மொய்க்க தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழில் நம்பர்-1 நடிகையாக சமந்தா வருவார் எனத் தெரிகிறது.
Share

Monday, February 13, 2012

ரேஸ்-2 படத்திலிருந்து தீபிகா விலகியதன் காரணம்

இந்தி படமான ரேஸ்-2 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா விலகிவிட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி பாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன்.
இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதுகுறித்து அவர் கூறியதாவது, கோச்சடையான் படத்திற்காக ரேஸ்-2 படத்திலிருந்து விலகவில்லை. ரொம்ப நாளைக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது.
ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டு உள்ளனர். இதனால் என்னுடைய கால்ஷீட் வீணானது. எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். இதுகுறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. நான் பதிலளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்
Share

Sunday, February 12, 2012

கோச்சடையானில் ரஜினியுடன் இணையும் சரத்குமார்

பத்திரிகையாளராக இருந்து கடின உழைப்பால் இன்று ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, சினிமா, அரசியல், நட்சத்திர கிரிக்கெட் என சரத்குமாரின் வளர்ச்சி எல்லாரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார் சில பத்திரிகை குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவி தொகையும் வழங்கினார்.
அவர் பேசுகையில் கடந்த சில வருடங்கள்  என் படங்களை வாங்க வணிக ரீதியாக சில பிரச்னைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து, இப்போது நான் ரொம்ப பிசியா இருக்கேன்.
மலையாளத்தில் நான் நடித்த பழசி ராஜா படம் என்னை பேச வைத்தது, தளபதியாக சரித்திர ரோலில் மம்முட்டியுடன் நடித்தது மறக்க முடியாது. தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டிருக்கேன்.
தற்போது கூட அச்சண்ட ஆண்மக்கள் என்ற படத்தில் கோவை பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதை அடுத்து கன்னடத்தில் தர்ஷன் ஹீரோவா நடித்த படத்தில் கெஸ்ட் ரோல் பண்றேன். சூப்பர் ஹிட் படம் தொடர்ந்து நடிக்க கதை கேட்டு வருகின்றேன்.
தெலுங்கில் சில படங்களில் நான் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா படம் மிக பெரிய பேரை தந்தது. அந்த படத்தில் அரவாணி ரோலில் நடிக்க வேண்டும் என்று லாரன்ஸ் கேட்ட போது உடனே சரி சொன்னேன், எனக்கு ஒரு பெரும் பேர் கொடுத்த படம் காஞ்சனா.
தமிழ்ல சினேகாவுடன் நான் நடித்த விடியல் படம் பாதியில் உள்ளது. அந்த படம் கூட சுதந்திரம் முன், சுதந்திரம் பின் என்று எடுக்கப்படும் படம். இதை அடுத்து நம்ம ஊரில் நடந்த உண்மை சம்பவம் மூளை சாவில் இறந்த ஒருவரின் இதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்தி உயிர் பிழைக்க வைத்த கதை. இதை மலையாளத்தில் டிராபிக் என்று படமாக்கி இருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் இப்போது தமிழில் எடுக்க போகிறோம். அதில் நான் உயிர் காப்பாற்றிய டிரைவராக நடிக்க போறேன்.
மேலும் ராதிகா, பிரகாஷ் ராஜ், ரம்யா நபீசன் போன்றோர் நடிக்க உள்ளனர். மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்போது எல்லாரும் கேட்டு கொண்டிருக்கும் செய்தி நான் ரஜினியுடன் நடிக்க போவது சௌந்தர்யா இயக்கும் படத்தில் நான் ரஜினியுடன் நடிக்க போறேன்.
இப்பதான் போட்டோ சூட் முடிந்தது ரொம்ப ஆர்வத்தோட இருக்கேன் ரஜினியுடன் நடிப்பதற்கு. என் அரசியல் வாழ்க்கையும் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு தென்காசியில மாதம் சில நாட்கள் தங்கி இருந்து அந்த பணியையும் சிறப்பாக செய்கிறேன்.
அங்கு எனக்கு சில ஆட்கள் உதவி செய்கின்றனர். நடிகர் சங்கத்திலும் என் பணியை திட்டமிட்டு செய்கிறேன். இப்போது பெப்சி பிரச்சனை குறித்து இரு தரப்பிலும், நாங்களும் பேசி வருகிறோம்,. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
என் மகள் வரலெட்சுமி பத்தி சொல்லனும்னா அவங்களோட மியூசிக் டான்ஸ் ஆர்வம் பார்த்தேன். சினிமான்னு அவங்க முடிவு பண்ணி அனுபம் கேர் நடிப்பு கல்லூரியில் சேர்த்துவிட சொன்னாங்க. சேர்த்து விட்டேன். நல்லா முடிச்சிட்டு வந்திட்டாங்க.
இப்ப சிம்புவுடன் போடா போடி படத்தில் நடிச்சிட்டு இருக்காங்க. அப்புறம் நாகார்ஜுன் மகனுடன் தமிழ் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க போறாங்க, இனி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நல்ல படங்கள் பண்ணுவேன் என்றார்.
Share