Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Saturday, November 5, 2011

பாலா இயக்கத்தில் மீண்டும் விக்ரம்?

'அவன் இவன்' படத்தைத் தொடர்ந்து பாலா அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் முரளி மகன் அதர்வா ஹீரோவாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்திகளில் பாதி அளவுதான் உண்மை என்கிறார்கள் பாலா அலுவலக வட்டாரத்தில். அதுவும் அதர்வாவுக்கு விரைவில் ஸ்கீரின் டெஸ்ட் எடுக்க இருக்கிறாராம் பாலா. அந்த பரிசோதனையில் அதர்வா ஒழுங்கா நடிக்கவில்லை என்றால் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருக்கும் புதுமுகத்தை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறாராம். 

இந்தப் புதுமுகப்பையன் மு.க. அழகிரியின் உறவினர் என்றும் தெரியவருகிறது, இவர் அனுபம் கெர் நடிப்புப் பள்ளியிலும், மும்பை 'விஸ்லிங் வுட்' திரைப்படக் கல்லூரியிலும் நடிப்பு படித்தவராம். ஆனால் அதர்வா இந்த வாய்ப்பை தவற விடமாட்டார், என்கிறார்கள். இதற்கிடையில் தற்போது இன்னோரு அதிரடியான ஹாட் தகவலும் பாலா அலுவலக வட்டாரத்தில் இருந்து கிடைக்கிறது.. பாலாவின் புதிய படத்தில் விக்ரமும் நடிக்க இருக்கிறார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். 

பொதுவாக தனது படங்களில் பணி புரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை மாற்ற விரும்பாதவர் பாலா. ஆனால் தற்போது புதிய டீமை அமைத்து வருகிறார். 'நான் கடவுள்', 'அவன் இவன்' ஆகிய படங்களில் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆர்தர்.ஏ.வில்சன் பாலாவுக்கு மிகவும் பிடித்தமான ஒளிப்பதிவாளர். ஆனால் தற்போது பாலாவின் டீமில் அவர் இல்லை. இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு மிகவும் பிடித்த ஒளிப்பதிவாளரான செழியனை புதிய படத்துக்கு  ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார். இவர் கடைசியாக 'ரெட்டச்சுழி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதேபோல பாலா படத்தின்  எடிட்டராக சுரேஷ் அர்ஸ் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு பதிலாக 'ஆடுகளம்' படத்துக்காக தேசிய விருது பெற்ற எட்டிட்டர் கிஷோரை  நியமித்துள்ளார். இதற்கெல்லாம் உச்ச பச்ச அதிரடியாக யுவனுக்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷ் இசையை பெரிதும் நம்பி அவரை அமர்த்திக் கொண்டிருக்கிறார். தற்போது கதாநாயகி தேர்வில் தீவிரமாக இருக்கிறார் பாலா. புதுசு புதுசா கலக்குறீங்க சரி.... க்ளைமாக்ஸ மட்டும் மாத்தமாட்டேன்றீகளே ஏன்?
Share

சந்தோஷத்தில் சூர்யா

சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான படம் '7ஆம் அறிவு'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார். இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. '7ஆம் அறிவு' படம் குறித்து நடிகர் சூர்யா கூறியிருப்பது "7ஆம் அறிவு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. '7ஆம் அறிவு' படம் என் மனதுக்கு நெருக்கமான படம். எனது திரையுலக வாழ்வில் சிறந்த ஐந்து படங்களில் இப்படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நமது வரலாற்றில் பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் இருந்து இருக்கிறர்கள். அவற்றில் ஒருவர்தான் போதிதர்மன். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு அற்புதமான இயக்குநர். மரபணு மாற்றம்  போன்ற விஷயங்களைக்கூட இப்படி ஒரு படத்தில் இணைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் இளைஞர்களுக்கான நல்ல கருத்துக்களும் இருக்கிறது". 
Share

பல்லை உடைப்பேன்: ராம்சரண் தேஜாவுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை...!


நிகழ்ச்சி ஒன்றில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசை புகழ்ந்து தள்ளிய தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவின் பல்லை உடைப்பேன் என்று சக மூத்த நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தமிழில் வெளியாகியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு படம், தெலுங்கிலும் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும், இளம் ஹீரோவான ராம்சரண் தேஜா, முருகதாசை புகழ்ந்து தள்ளியுள்ளார். தமிழுக்கு கிடைத்த இப்படி‌யொரு இயக்குநர், தெலுங்கிலும் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்ட வசமானது என்று கூறினார். ராம்சரணின் இந்த பேச்சு, சகநடிகர் பாலகிருஷ்ணாவை கோபமடையச் செய்துள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய பாலகிருஷ்ணா, ராம்சரணின் ‌பெயரைச் சொல்லாமல் சமீபத்தில் நடிகர் ஒருவர், தமிழ் டைரக்டரை புகழ்ந்து தள்ளி பேசியுள்ளார். அது தவறல்ல. ஆனால் அப்படியொரு டைரக்டர் தெலுங்கில் இல்லாதது துரதிர்ஷ்டம் என்றுள்ளார். சினிமா வரலாறு தெரியாமல் எதையாவது பேசக்கூடாது. தெலுங்கு சினமாவிலும் நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர். சும்மா ஒன்றிரண்டு படத்தில் நடித்து விட்டு இங்குள்ளவர்களை தரக்குறைவாக பேசுவது சரியல்ல. இனியும் இப்படி பேசினால் அவரது பல்லை உடைப்பேன் என்று கூறியுள்ளார்.

இத‌னிடையே, இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்து இருக்கும் சிரஞ்சீவி, ராம்சரண் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தெலுங்கிலும் நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர் என்றார்
Share