Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Tuesday, March 15, 2011

கருத்தடை மாத்திரைப் பயன்பாடு


கர்ப்பமாவதைத் தடுப்பதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. கர்ப்பம் தரியாத பாதுகாப்பான நாட்களில் உறவை வைத்துக் கொள்ளலாம். இந்த நாட்களை தம்பதியர் அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்தலாம்.
அடுத்ததாகப் பயன்பாட்டிலுள்ள முறை கர்ப்பபைக்குள் விந்தணு உட்செல்லாமல் தடுக்கும் இம்பிளானோன் (IMPLANON)  எனப்படும் தடுப்பு. இது மருத்துவரின் ஆலோசனை மற்றும் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.
கருப்பைக்குச் செல்லும் இரட்டைக் குழாய்களைக் (FALLOPIAN TUBES) கட்டுதல், முற்றாக மூடுதல் (SEAL SHUT) அல்லது மின்சாரக் கத்தி மூலம் பொசுக்கி விடுதல் (CAUTERIZATION) என்பனவாகும் ஆண் உறைப் பாவனை மிகச் சிறந்த கருத்தடை உபாயமும் நோய்த் தடுப்பு வழிமுறையுமாகும்.
மிகப் பரவலாக பாவனையிலுள்ள முறை கருத்தடை மாத்திரை உட்கொள்ளலாகும். இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இல்லாவிட்டால் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அறிவியல் முன்னேற்றம் என்று கருத்தடை மாத்திரை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 1970 களில் பெண் விடுதலைக்கான குரல் எழுந்த போது கருத்தடை காத்தரைக்கான முக்கியத்துவம் உணரப்பட்டது. ஒரு கணக்கின்படி பத்துக்கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இதன் மூலம் தேவையற்ற மகப் பேற்றைத் தவிர்த்துள்ளனர்.
கருத்தடை  மாத்திரைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சில பாவனையாளர்கள் மார்புப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். மார்புப்புற்றுநோய்க்கும் கருத்தடை மாத்திரைப் பாவனைக்கும் தொடர்பு இருப்பதாக மார்புப் புற்று நோயால் துன்பப்படும் பெண்கள் நம்புகின்றனர்.
ஒரு சிறந்த கருத்தடை மாத்திரை இப்படி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கருத்தடை மாத்திரைகளில் இரண்டு ஹோர்மோன்கள் இருக்கின்றன. அவற்றின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும். அதேசமயம் கருத்தடை செய்வதில் வலுவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கருத்தடை மாத்திரைப் பாவனையாளர்களுக்கு தலைச்சுற்று, குமட்டல், எடைகூடுதல், இரத்தக்குழாய்களில் கட்டி ஏற்படுதல் போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. ஒரு சிறந்த கருத்தடை மாத்தரையானது  இவற்றைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்குப் பாலூட்டும் தாய் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருத்தல் வேண்டும்.
மாதவிடாய் வருவதில் தடங்கல் ஏற்படக்கூடாது. சில பெண்களுக்கு பெருமளவில் குருதிப் போக்கு ஏற்படுகிறது. அதைத் தடுப்பதற்கு சில மருத்துவர்கள் கருத்தடை மாத்திரையைக் கொடுக்கிறார்கள். இது முறையான சிகிச்சை முறையல்ல.
மாத்திரைகள் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் சகாய விலையில் கிடைக்க வேண்டும். முற்றாகப் பாதுகாப்பான பக்க விளைவுகளற்ற கருத்தடை மாத்திரைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அமெரிக்காவின் எப் டி ஏ (FDA) எனப்படும் உணவு மற்றும் மருத்துவப் பொருள் நிர்வாகம் (FOOD AND DRUG ADMINISTRATION)  1960ம் ஆண்டில் கருத்தடை மாத்திரைக்கு அங்கீகாரம் வழங்கியது. இப்போது 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஒரு சிறந்த கருத்தடை மாத்திரையை உருவாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
கருத்தடை மாத்தரைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன .சில பாவனையாளர்கள் மார்புப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். மார்புப் புற்று நோய்க்கும் கருத்தடை மாத்திரைப் பாவனைக்கும் தொடர்பு இருப்பதாக மார்புப் புற்று நோயால் துன்பப்படும் பெண்கள் நம்புகின்றனர்.
ஒரு சிறந்த கருத்தடை மாத்திரை இப்படி இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கருத்தடை மாத்திரைகளில் இரண்டு ஹார்மோன்கள் இருக்கின்றன. அவற்றின் அளவு குறைவாக இருத்தல் வேண்டும் அதே சமயம் கருத்தடை செய்வதில் வலுவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கருத்தடை மாத்திரைப் பாவனையாளர்களுக்கு தலைச்சுற்று, குமட்டல், எடைகூடுதல், இரத்தக் குழாய்களில் கட்டி ஏற்படுதல் போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. ஒரு சிறந்த கருத்தடை மாத்திரையானது இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைக்குப் பாலூட்டும் தாய் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருத்தல் வேண்டும்
Share

Tuesday, March 8, 2011

திருமண மோதிரம் எப்படி தோன்றியது


தமிழர் கலாச்சாரத்தில் திருமணத்தின் அடையாளமாக தாலி அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. தாலி என்ற சொல் எப்படித் தோன்றியது பற்றிய ஆய்வுகள் எராளம். பனை மரத்தின் மறு பெயர்களாகத் தாளி, தாலம், பெண்ணை என்பன இடம் பெறுகின்றன.
பனை ஓலையின் ஒரு நறுக்குத் துண்டில் இவள் இவனின் மனைவி என்று எழதிப் பலபேர் முன்னிலையில் அவள் கழுத்தில் அவன் கட்டிவிடுவான். இது தான் தாலி கட்டும் வழமையின் தொடக்கம் என்கிறார்கள். மிகவும் சுருக்கமாக அன்று நடந்த சடங்கு இன்று விரிவடைந்து பாரிய சமூக பொருளாதார நிகழ்ச்சியாகி விட்டது.
திருமணத்தின் குறியீடாகவுள்ள கை விரலில் அணியும் மோதிரம் பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்து தோன்றியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர், மேற்கு நாடுகளின் திருமணச் சடங்குகளில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மோதிரம் கிழக்கு நாடுகளின் திருமணச் சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருமணச் சடங்கில் மோதிரம் மாற்றும் வரலாறைப் பைபிள் நூலில் பார்க்கலாம். எகிப்தில் முதன் முதலாக வடிவமைக்கப்பட்ட திருமண மோதிரங்கள் பப்பைரஸ் (PAPYRUS ) என்ற ஒரு வகை தாவரத்தின் நீளமான இலை, நாணல் புல் ஆகியவற்றைத் திரட்டிச் செய்யப்பட்டன.
மோதிரங்கள் முடிவில்லாத வளையங்கள் என்பது எகிப்தியர்களின் கோட்பாடு. இந்தக் காரணத்திற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
திருமண பந்தம் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இடது கை விரலில் அணியும் வழக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள்.மோதிரம் அணியும் விரல் காதல் விரல் (LOVE FINGER ) என்று அழைக்கும் வழக்கம் இன்று உண்டு. இதயத்தோடு நேரடித் தொடர்புடைய விரல் என்றும் அது சிறப்பிக்கப் படுகிறது.இடது கையின் சின்ன விரலுக்குப் பக்கத்தில் உள்ள விரல் தான் மோதிர விரல் என்று சொல்லப்படுகிறது.
கி. மு. 332ல் மகா அலெச்சாந்தர் எகிப்தைக் கைப்பற்றினார். அதன்பின் மோதிரம் அணியும் வழக்கம் எகிப்தில் இருந்து கிரேக்கத்திற்குச் சென்றது. கிரேக்கத்திலிருந்து இந்த வழக்கம் ரோம சாம்ராச்சியத்திற்குச் சென்றது. பண்டைய ரோமாபுரியில் திருமண மோதிரங்கள் இரும்பில் செய்யப்பட்டன.
17ம் நூற்றாண்டில் ரோமாபுரியில் இருந்து இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு மோதிரம் அணியும் வழக்கம் பரவியது. திருமணங்களில் முக்கிய மையப் பங்கு வகிக்கும் மோதிரம் தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள்களை இழைத்துச் செய்யப்படுகின்றன.
இரும்பு மோதிரங்களுக்குப் பிறகு வெள்ளி மோதிரங்களின் காலம் நிலவியது. அதன் பின் தங்கத்தின் யுகம் தோன்றி இன்று வரை நிலவுகிறது. திருமண மோதிரம் அணிவிப்பதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் சட்டபூர்வத் திருமணமாகப் பல மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.இன்று கிழக்கு நாடுகளில் மோதிரம் மாற்றும் வழக்கம் திருமணத்தின் போது இருக்கிறது.விவாகரத்தின் போது மனைவிக்கு அணிவித்த மோதிரத்தை ஆண்கேட்கும் உரிமை சட்டத்தில் இல்லை. அது போல் எமது நாட்டில் தாலிக் கொடியைத் திருப்பிக் கேட்கும் உரிமை சட்டபூர்வமாக இல்லை.

Share